

இந்தியாவும் அமெரிக்காவும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண் டும் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ். ஜெய்சங்கர் கூறினார்.
இதுகுறித்து சிகாகோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய தாவது:
இந்தியாவில் நடைபெறும் தேர்தல், வளர்ந்து வரும் அதன் பொருளாதாரம் மற் றும் இந்திய – அமெரிக்க உறவுகள் ஒன்றுக்கொன்டு தொடர்புடை யவை. இந்தியாவில் தேர்தலுக்குப் பின் அமையும் எந்த அரசும் நாட்டை கட்டமைப்பதையே தனது முன்னுரிமைப் பணியாக மேற்கொள்ளும். வளர்ச்சி விகிதத்தை குறையாமல் பார்த் துக்கொள்வதற்கும், அதை அதி கரிப்பதற்கும் முக்கியத்துவம் தரும்.
முதலீடுகளை ஊக்கப்படுத்து வது, தொழில் துறையை விரிவுபடுத்துவது, கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துவது, தொழிலாளர் திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் உள்ளிட்டவை புதிய அரசின் பணிகளாக இருக்கும்.
இந்நிலையில் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் இன்றியமையாத கூட்டாளியாக அமெரிக்கா இருப்பதற்கு இரு நாடுகள் இடையிலான உறவு பாதுகாக்கப்பட வேண்டும்.
இதற்கு வாக்குவாதம் செய்துகொண்டிருப்பதை தள்ளி வைத்துவிட்டு, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.