

நியூசிலாந்தில் கடலுக்கு அடியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்தின் ஜிஸ்போர்ன் நகரில் இருந்து 169 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.1 ஆகப் பதிவானது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்பகுதி கடற் கரையோர மக்கள் பாதுகாப் பான இடங்களுக்கு அப்புறப்படுத் தப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக சுனாமி அலைகள் உருவாகவில்லை. சில மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஜிஸ்போர்ன் பகு தியில் ஏராளமான வீடுகளின் சுவர் களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. மின்விநியோகமும் நிறுத்தப்பட் டுள்ளது. அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டு கொண்டிருக்கி ன்றன. நேற்றுவரை 140 நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. இதில் 100 நிலஅதிர்வுகள் ரிக்டர் அலகில் 3 ஆகப் பதிவானது.
நியூசிலாந்து நாட்டில் ஆண்டு தோறும் சிறிதும் பெரிதுமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.