

இந்தியாவிடமிருந்து ஒட்டுமொத்த காஷ்மீரையும் கைப்பற்றுவேன், ஓர் அங்குலத்தைகூட விட்டுவைக்கமாட்டேன் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளது. அந்தப் பகுதிகளை பார்வையிட்ட பிலாவல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் முல்தானில் உள்ள முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் வீட்டில் கட்சித் தொண்டர்களிடையே அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சொந்த மானது. நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்று. இந்தியாவிடமிருந்து ஒட்டுமொத்த காஷ்மீரையும் கைப்பற்று வேன். ஓர் அங்குலத்தைகூட விட்டுவைக் கமாட்டேன். கனமழையால் பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளது. இதை சாதகமாகப் பயன் படுத்தி பாகிஸ்தானின் எதிரிகள், இஸ்லாமாபாத் மூழ்கி கொண்டிருக்கிறது என்று பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இக்கட்டான நேரத்தில் பாகிஸ்தான் மக்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று அவர் பேசினார்.
புட்டோ குடும்பத்தைச் சேர்ந்த இளம் தலைவர் பொறுப்பற்ற வகையில் பேசியிருப்பதற்கு பல்வேறு தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந் துள்ளன.
பிரதமர் கனவில் மிதக்கும் பிலாவல்
பிலாவலின் தாத்தா ஜில்பிகர் அலி புட்டோ 1967-ல் பாகிஸ்தான் மக்கள் கட்சியைத் தொடங்கி 1970-களில் பிரதமராகப் பதவி வகித்தார். பிலாவலின் தாயார் பெனாசிர் புட்டோ இரண்டு முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார். தந்தை ஆசிப் அலி சர்தாரி 2008 முதல் 2013 வரை அதிபராக பதவி வகித் துள்ளார்.
26 வயதாகும் பிலாவல் வரும் 2018 பொதுத் தேர்தலில் போட்டியிட போவதாக அண்மையில் அறிவித்தார். “எனது தாயார் பெனாசிர் புட்டோவின் கனவுகள், லட்சியங்களை நிறைவேற்றவே தற்போது தீவிர அரசியலில் குதித்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.
பிலாவல் பிரதமர் கனவில் மிதப்பதாகவும் அதற்கு இப்போதே அவர் தயாராகி வருவதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் தேசிய அரசியலில் இம்ரான் கான் அசூர வளர்ச்சி அடைந்து வருவதால் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பிலாவல் இவ்வாறு பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.