

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் எடின்பரோ கோமகனுமான பிலிப் அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
ராணி 2-ம் எலிசபெத் 65 ஆண்டுகள் இங்கிலாந்தின் ராணியாக பதவி வகித்து வருகிறார். அவருக்கு வயது 91. அவரது கணவர் பிலிப்புக்கு தற்போது 95 வயதாகிறது. வயது முதுமை காரணமாக வரும் அக்டோபர் முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார், அரச பணிகளில் இருந்து முழுமை யாக ஓய்வு பெறுகிறார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித் துள்ளது. எனினும் ஆகஸ்ட் வரை ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் மட்டும் பிலிப் பங்கேற்பார்.
இங்கிலாந்து ராணி எலிசபெத் தொடர்ந்து தனது அரசு பணிகளை மேற்கொள்வார். அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.