

மத்திய நைஜீரியாவில் உள்ள 3 கிராமங்களுக்குள் அதிரடியாக புகுந்து ஆயுதமேந்திய கும்பல் நடத்திய பயங்கர தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
தானியங்கி துப்பாக்கிகள், வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமார் 40 பேர் அங்வான் கதா, சென்ஷியி, அங்வான் சங்வாய் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கினர். வீடுகளையும் தீவைத்து கொளுத்தினர்.