

‘‘தலிபான் தீவிரவாத இயக்கத் தலைவரை, இதுவரை தீவிரவாதி யாக அறிவிக்காதது மர்மமாக உள்ளது’’ என்று இந்தியாவின் சார்பில் ஐ.நா.வின் நிரந்தர துணை பிரதிநிதியாக உள்ள தன்மயா லால் சந்தேகம் எழுப்பினார்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விரிவான விவாதம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவுக்கான ஐ.நா. நிரந்தர துணை பிரதிநிதி தன்மயா லால் பேசியதாவது:
ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கடந்த மே மாதம், அமெரிக்க டிரோன்கள் தாக்குதலில் உயிரிழந்தார். அதன்பிறகு தலிபான் தலைவராக தற்போது மவ்லவி ஹய்பத்துல்லா அக்குன்ஜடாவை அறிவித்துள்ளனர். ஐம்பது வயது நிரம்பிய ஹய்பத்துல்லா பழமைவாதத்தையும் மதவாதத் தையும் ஆதரித்து தூண்டி வருபவர். ஆனால், இதுவரை அவரை உலக நாடுகள் தீவிர வாதிகளின் பெயர் பட்டியலில் சேர்க்கவில்லை. இது எப்படி சாத்தியமானது என்பது ஆச்சரிய மாக உள்ளது.
இந்த நடவடிக்கை மிகவும் மர்மமாக உள்ளது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள இந்தியா விரும்புகிறது. தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவரை தீவிர வாதியாக அறிவிக்காத நிலையில் அமைதி, பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள் ளது. ஆப்கானிஸ்தானின் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை அரங் கேற்றி வருபவர்களுக்கு அண்டை நாடு (பாகிஸ்தான்) பாதுகாப்பும், ஆதரவும் அளிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.