ஐ.நா. பொது சபை நாளை கூடுகிறது: மோதலுக்கு தயாராகும் இந்தியா, பாகிஸ்தான்

ஐ.நா. பொது சபை நாளை கூடுகிறது: மோதலுக்கு தயாராகும் இந்தியா, பாகிஸ்தான்
Updated on
1 min read

ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நியூயார்க்கில் நாளை தொடங்குகிறது. இதில் 195 நாடுகளின் தலைவர்கள் பங்கேற் கின்றனர். இந்த மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் மோத லுக்கு தயாராகி வருகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகம் உள்ளது. அங்கு ஐ.நா. பொது சபையின் 71-வது கூட்டத்தொடர் நாளை தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட 195 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

சிரியா உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றம், சர்வதேச தீவிரவாதம், அகதிகள் விவகாரம், கொரிய தீபகற்ப பதற்றம் உள் ளிட்ட விவகாரங்கள் குறித்து பொது சபை கூட்டத்தொடரில் விவா திக்கப்பட உள்ளது.

வரும் 20-ம் தேதி முதல் உலக நாடுகளின் தலைவர்கள் பொது சபை கூட்டத்தொடரில் உரை யாற்ற உள்ளனர். முதல் நாளில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேச உள்ளார். மத்திய கிழக்கு, வடஆப்பிரிக்காவில் நிலவும் குழப்பமான சூழ்நிலைகள் குறித் தும் உலக பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்தும் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

காஷ்மீர் விவகாரம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரும் 21-ம் தேதி ஐ.நா. பொது சபையில் பேசுகிறார். அப்போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப அவர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை பிரதமர் நவாஸ் ஐ.நா. சபையில் எழுப்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் பங் கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரும் 26-ம் தேதி உரையாற்றுகிறார். பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க அவர் புதிய வியூகங்களை வகுத்து வருகிறார்.

‘காஷ்மீர் குழப்பங்களுக்கு பாகிஸ்தானே முக்கிய காரணம், அந்த நாடு தீவிரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் அளித்து வருகிறது. பலுசிஸ்தானில் அந்த நாட்டு ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது’ என்று சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டுவார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in