தெற்கு ஆசியாவில் அமைதி ஏற்பட காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக உள்ளது: பாகிஸ்தான்

தெற்கு ஆசியாவில் அமைதி ஏற்பட காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக உள்ளது: பாகிஸ்தான்
Updated on
1 min read

தெற்கு ஆசியாவில் அமைதி ஏற்படுவதில் காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக உள்ளது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் இன்று (சனிக்கிழமை) பாகிஸ்தானிய அமெரிக்கர்களிடம், பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமத் இஷக் தார் கூறும்போது, "தெற்கு ஆசியாவில் அமைதி ஏற்படுவதில் காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக இருந்து வருகிறது

பல வருடங்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இப்பிரச்சினையை தீர்ப்பதில் உலக நாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இரு நாடுகளுக்கு இடையே நிகழும் காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துவிட்டால், தெற்கு ஆசிய பிராந்திய பகுதியில் அமைதி நிலவும். இதன் மூலம் பாதுகாப்புக்காக இரு நாடுகளும் செலவிடும் தொகையை சமூகத்தின் வளர்ச்சிக்கு திருப்பலாம். பாகிஸ்தான் அரசு சமாதானத்தையே விரும்புகிறது. தனது அண்டை நாடுகளுடன் சிறந்த உறவையே பாகிஸ்தான் பேணிவருகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு இந்தியாவுடன் சுமூகமான தீர்வு இருப்பதாக பாகிஸ்தான் நம்புகிறது" என்றார்.

கடந்த செப்டம்பர் 29-ம் தேதி எல்லையில் இந்திய ராணுவம் துல்லிய திடீர் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in