நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு அதானி குழுமம் முழு ராயல்டி தொகை செலுத்த வேண்டும்: ஆஸ்திரேலியா திட்டவட்டம்

நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு அதானி குழுமம் முழு ராயல்டி தொகை செலுத்த வேண்டும்: ஆஸ்திரேலியா திட்டவட்டம்
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் அதானியின் சர்ச்சைக்குரிய கார்மிச்சேல் நிலக்கரிச் சுரங்கத் திட்டத்துக்கு அதானி குழுமம் முழு ராயல்டி தொகையையும் செலுத்தியாக வேண்டும் என்று குவீன்ஸ்லாந்து மாகாண அமைச்சரவை திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்த்துக்குப் பிறகு குவீன்ஸ்லாந்து பிரீமியர் அனஸ்டாஸியா பாலாஸ்சுக் கூறும்போது, மத்திய குவீன்ஸ்லாந்தில் அதானி குழுமத்தின் 21.7 பில்லியன் டாலர்கள் சுரங்கத் திட்டத்துக்கு ராயல்டி சலுகை கிடையாது, அந்நிறுவனம் முழு தொகையையும் செலுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக ஏபிசி செய்திகள் குவீன்ஸ்லாந்து அரசு அதானி குழுமத்துக்கு ராயல்டியில் கழிவு அளிக்கும் என்றும் இதனால் 320 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் இழப்பு ஏற்படும் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

அதானி கூறும்போது, “எப்போதும் போல் ஒவ்வொரு செண்ட்டிற்கும் முழு ராயல்டி தொகை அளிக்கப்படும் இத்திட்டத்தினால் சுமார் 10,000 வேலைகள் உருவாக்கப்படும்” என்றார்.

இந்த நிலக்கரிச் சுரங்கத் திட்டத்துக்கு ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் இயக்கங்களும், பழங்குடி மக்கள் பிரிவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in