Last Updated : 26 Jul, 2016 11:14 AM

 

Published : 26 Jul 2016 11:14 AM
Last Updated : 26 Jul 2016 11:14 AM

ஜப்பானில் 19 மாற்றுத்திறனாளிகள் குத்திக் கொலை: வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது

ஜப்பானில் மாற்றுத்திறனாளிகள் மையத்தில் இருந்த 19 பேரை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஜப்பான் தலைநகர் டோக்கி யோ அருகில் உள்ள சகாமிஹரா பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்த மையத்தில் உமட்சூ (26) என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2.10 மணியளவில் மையத்தின் முதல் மாடியில் உள்ள ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த உமட்சூ, அங்கிருந்த டாக்டர்கள், பாதுகாவலர்களை கயிறால் கட்டிவைத்துள்ளார். பின்னர் அங்கு உறங்கிக் கொண்டிருந்த மாற்றுத் திறனாளிகளை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதில் 19 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 25 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், உமட்சூவை கைது செய்தனர்.

அதிகாலை 3 மணியளவில் ஏராளமான ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பியபடி அங்கு குவிந்ததால், அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்களும் மிகுந்த பதற்றம் அடைந்தனர்.

இதற்கிடையில் போலீஸ் நிலை யத்துக்கு அழைத்துச் செல்லப் பட்ட உமட்சூவிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, மாற்றுத் திறனாளிகள் இல்லாத உலகை உருவாக்க முடிவு செய்தே, இந்த கொலையில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் கருணை கொலை செய்யப்பட வேண்டும் என்றும் இதற்கு அரசு உத்தரவிட்டால் தன்னால் 470 பேர் வரை கொலை செய்ய முடியும் என்றும் கூறி ஏற்கெனவே ஜப்பான் நாடாளு மன்றத்துக்கு உமட்சூ கடிதம் அனுப்ப முயன்ற விவகாரமும் தற்போது அம்பலமாகியுள்ளது.

ஜப்பானில் 1938-ம் ஆண்டில் கோடாரி, கத்தி மற்றும் துப்பாக் கியால் மர்ம நபர் 30 பேரை சுட்டுக் கொன்றார். அதன் பிறகு வேறு எந்தவொரு குற்றச்செயல்களும் அந்நாட்டில் நடந்ததில்லை. இதனால் மாற்றுத் திறனாளிகள் 19 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச் சியையும் சோகத்தையும் ஏற்படுத் தியுள்ளது. மாற்றுத் திறனாளி களை கொலை செய்த உமட்சூ, அருகில் உள்ள நகரத்தில் தான் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் அகிரோ ஹஸேகவா (73) கூறும்போது, ‘‘அண்டை வீட்டில் உள்ள குழந்தை களுடன் தான் உமட்சூ எப்போதும் விளையாடி கொண்டிருப்பார். உள்ளூர் பள்ளியில் ஆசிரியர் பணி பயிற்சியும் முடித்துள்ளார். மற்றவர்களை போல சகஜமான நபராக தான் இருந்தார். எனது பேத்தி கூட அவர் ஒரு நல்ல ஆசிரியர் என்று தான் புகழ்வாள். அவர் இந்த கொலை செய்துள்ளார் என்பது நம்ப முடியாததாக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x