தென் ஆப்பிரிக்காவில் காந்தி நினைவு நடைப்பயணம்

தென் ஆப்பிரிக்காவில் காந்தி நினைவு நடைப்பயணம்
Updated on
1 min read

1913ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா வில் இங்கிலாந்து அரசின் இனப் பாகுபாடான சட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு 100 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், அச் சம்பவத்தை நினைவு கூரும் வகையில் மீண்டும் அதேபோன்ற நடைப்பயணம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதையொட்டி டர்பன் நகரில் இருந்து பீட்டர்மேரிட்ஸ்பர்க், லேடிஸ்மித் உள்ளிட்ட நகரங்கள் வழியாக நியூகேஸ்டில் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு நடைப்பயணம் தொடங்கவுள்ள நிலையில் முதல் நாள் அதிகாலை 2 மணிக்கு நூற்றுக் கணக்கானோர் நியூகேஸ்டில் செல்வதற்காக டர்பனில் இருந்து புறப்பட்டனர்.

அவர்கள், காந்தியும் அவரது ஆதரவாளர்களும் நடைப்பயணம் மேற்கொண்ட அதே வழியில் அதாவது, சார்லஸ் டவுன் என்ற இடத்தில் தொடங்கி வாக்ஸ்ரஸ்ட் சிறைச்சாலை வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர்.

இந்திய ஒப்பந்தத் தொழிலா ளர்கள் மீதான 3 பவுண்ட் வரி, இந்து மற்றும் முஸ்லிம் திருணங்களை செல்லாததாக்கும் அரசு உத்தரவு ஆகியவற்றுக்கு எதிராக, 1913ல் காந்தி தனது ஆதரவாளர்களுடன் நடைப்பயணம் தொடங்கினார். இவர்கள் நடால் மாகாண எல்லையை கடந்து டிரான்ஸ்வால் மாகாண எல்லைக்குள் நுழைந்த போது, அனைவரையும் அரசு கைது செய்தது. மற்றொரு மாகாணத்துக்குள் இந்தியர்கள் நுழையும்போது, அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு அனுமதி ஒப்புகை சீட்டு இல்லாததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கத்துக்கு மாறான காந்தி யின் இந்தப் போராட்டம், அவர் 1914ல் தாயகம் திரும்பிய பிறகு இங்கிலாந்து அரசுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியானது. இதுவே தண்டி யாத்திரைக்கு இட்டுச் சென்றது.

காந்தியின் இந்த வரலாற்று சிறப்புமிகுந்த நடைப்பயணம் தொடர்பாக, தென் ஆப்பிரிக்காவில் 1913ல் அவர் அடைக்கப்பட்டிருந்த வாக்ஸ்ரஸ்ட் சிறையில் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இங்குள்ள இந்திய தூதரம் இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நூற்றாண்டு நினைவு நடைப் பயணத்தில் இந்திய தூதர் வீரேந்திர குப்தா பங்கேற்றார். நடைப்பயண இறுதியில் அவர் உரையாற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in