அமெரிக்க பாப் பாடகி சுட்டுக் கொலை

அமெரிக்க பாப் பாடகி சுட்டுக் கொலை
Updated on
1 min read

அமெரிக்காவின் புளோரிடா நகரில் இசைக் கச்சேரி நடத்திய இளம் பாப் பாடகி கிறிஸ்டினா ஜிரிமி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த ‘தி வாய்ஸ்’ இசைப் போட்டி நிகழ்ச்சியில் கிறிஸ்டினா ஜிரிமி 3-ம் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இளம் பாப் பாடகிகளில் ஒருவராக உருவெடுத்த அவர் நேற்று முன்தினம் இரவு புளோரிடா நகரில் இசைக் கச்சேரி நடத்தினார்.

அதன்பிறகு ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்மநபர் கிறிஸ்டினாவை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் மயங்கி சரிந்தார்.

அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in