

இராக்கில் 3 இடங்களில் புதன் கிழமை குண்டுவெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் பாக்தாதில் உள்ள வெளியுறவு அமைச்சகம் எதிரில் காரில் மறைத்து வைக்கப்பட் டிருந்த குண்டு வெடித்துச் சிதறி யது. உணவு விடுதி ஒன்றில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.
இதுதவிர, மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைத்தெருவில் நிறுத்தப் பட்டிருந்த ஒரு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். இந்த மூன்று சம்பவங்களிலும் மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சமீப காலமாக சன்னி தீவிரவாத குழுக்களே இதுபோன்ற தாக்கு தலை நடத்தி வருகின்றன.
இராக்கில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வன்முறைச் சம்பவங்களில் சிக்கி சுமார் 1,000 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக அன்பர் மாநிலத்தில்தான் அதிக அளவில் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர்.