சட்டவிரோதமாக குடியேறுபவர்களை திரும்பப் பெற மறுக்கும் இந்தியா உள்ளிட்ட 23 நாட்டினருக்கு அமெரிக்க விசா வழங்கக்கூடாது: செனட் உறுப்பினர் வலியுறுத்தல்

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை திரும்பப் பெற மறுக்கும் இந்தியா உள்ளிட்ட 23 நாட்டினருக்கு அமெரிக்க விசா வழங்கக்கூடாது: செனட் உறுப்பினர் வலியுறுத்தல்
Updated on
1 min read

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்பப் பெற மறுக்கும் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா வழங்கக் கூடாது என்று அந்நாட்டு மூத்த செனட் உறுப்பினர் வலியுறுத்தி உள்ளார்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினரும் செனட் நீதிக் குழு தலைவருமான சுக் கிராஸ்லி உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் ஜே ஜான்சனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக இங்கு குடியேறுகின்றனர். அல்லது விசா காலம் முடிந்த பிறகும் இங்கேயே தங்கிவிடுகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக குடியேறிய தங்கள் நாட்டவர் களை திரும்பப் பெறுமாறு கோரிக்கை வைக்கப்படு கிறது. ஆனால் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் இந்தக் கோரிக்கையை ஏற்பதில்லை. இதனால், சட்டவிரோத மாக தங்கியிருப்பவர்களை விடுவிக்க வேண்டி இருப்பதால் குற்றங்கள் பெருகி வருகிறது.

இவ்வாறு சட்டவிரோதமாகக் குடியேறும் தங்கள் நாட்டவர் களைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்காத நாடுகள் மீது அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை.

இந்தப் பிரச்சினைக்கு குடியேற்றம் மற்றும் குடியுரிமை சட்டத்தின் 243(d)-வது பிரிவில் தீர்வு கூறப்பட்டுள்ளது என்பதை நினைவுகூர விரும்புகிறேன். அதாவது, இந்தப் பிரிவின்படி, சட்டவிரோதமாக குடியேறிய அல்லது தங்கியிருப்பவர்களை சம்பந்தப்பட்ட நாடுகள் திரும்பப் பெறாவிட்டால், அந்த நாட்டினருக்கு குடியேற்ற விசா மற்றும் தற்காலிக (சுற்றுலா) விசா வழங்குவதை நிறுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in