

இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி ஆரம்ப காலத்தில் தென்ஆப்பிரிக்காவில் வழக்கறிஞ ராகப் பணியாற்றினார். அங்கு தான் அவர் முதல்முறையாக சத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது தென்ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்கள் நிலமோ, வீட்டுமனை உள்ளிட்ட சொத்து களோ வாங்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து டர்பன் நகரில் 1946-ல் மிகப்பெரிய அறப்போராட்டம் நடைபெற்றது.
அதன் 70-வது ஆண்டு நினைவு தின விழா டர்பனில் நேற்று நடைபெற்றது. இதில் காந்தியின் பேத்தி எலா காந்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.