

அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள மோடி ட்ரம்புக்கு அளித்த பரிசுப் பொருட்கள் குறித்த விவரம் பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதன்மை தலைமைச் செயல் அதிகாரிகள்,அமெரிக்க வாழ் இந்தியர்கள், டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை மோடி சந்தித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு, இருநாட்டு உறவுகள் மோடியும், டிரம்ப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு இந்தியாலிருந்து கொண்டுச் சென்ற பரிசு பொருட்களை மோடி வழங்கினார்.
அதுகுறித்த விவரத்தை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அதன் விவரம்: ஆபிரகாம் லிங்கனின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு இந்தியா தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது அதன் அசலான முத்திரையை ட்ரம்புக்கு வழங்கினார்.
மேலும் காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து புகழ்பெற்ற தேயிலை மற்றும் தேன் அத்துடன் இமாச்சலப்பிரதேசத்திலிருந்து வெள்ளிக் காப்பு மோடி வழங்கினார்.
ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்புக்கு காஷ்மீரின் கைகளால் நெய்த சால்வைகளைப் பரிசாக வழங்கினார் இந்திய பிரதமர் மோடி.