ஆலிஸ் ஹெர்ஸ் காலமானார்: நாஜிக்கள் மரண முகாமில் உயிர் தப்பியவர்

ஆலிஸ் ஹெர்ஸ் காலமானார்: நாஜிக்கள் மரண முகாமில் உயிர் தப்பியவர்
Updated on
1 min read

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜிகள் மரண முகாமில் இருந்து உயிர் தப்பியவரும், உலகின் மிக வயதானவர்களுள் ஒருவருமான ஆலிஸ் ஹெர்ஸ் சோமர் தன் 110-வது வயதில் திங்கள்கிழமை காலமானார்.

யூதரான ஆலிஸ் ஹெர்ஸ் சோமர் 1903-ம் ஆண்டு செக்கோஸ்லோவோகியாவில் பிறந்தார். அங்குள்ள பிராக் நகரில் இசைக் கல்லூரியில் இசை பயின்றார். இரண்டாம் உலகப்போரின் போது, செக்கோ ஸ்லோவோகியா மீது ஜெர்மனி படையெடுத்தது. அப்போது, நோய்வாய்ப்பட்ட தன் தாயாரைக் கவனித்துக் கொள்ள ஆலிஸ் செக்கோஸ்லோவோகியாவில் தங்கிவிட்டார்.

ஆலிஸின் தாயாரைக் கைது செய்த நாஜிகள் அவரைக் கொன்று விட்டனர். செகோஸ்லோவோ கியாவில் ஏராளமான யூதர்கள் கைது செய்யப்பட்டனர். 1943 ஜூலை மாதம் தேர்ஸியன் ஸ்டேட் பகுதிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் யூதர்களுடன் ஆலிஸ் கொண்டு செல்லப்பட்டார். அங் குள்ள மரண முகாமில் 33 ஆயிரத்து 430 யூதர்கள் உயிரி ழந்தனர். ஆனால், ஆலிஸ் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். அவர் இசையாசிரியர் என்பதால், கைதிகள் முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்த அவர் பணிக் கப்பட்டார்.

இதனிடையே 1945-ம் ஆண்டு சோவியத் ரஷியப் படைகள் டெரஸின் பகுதியில் அடைக் கப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விடுவித்தனர். விடுவிக்கப்பட்டவர்களில், ஆலிஸ் மற்றும் அவரது மகன் ஸ்டீபனும் இருந்தனர்.

மரண வாசல்வரை சென்ற ஆலிஸ் தனக்கிருந்த இசைத் திறமையால் உயிர்தப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in