

யூத சமூகத்துக்கு எதிராக அச்சுறுத்தல் தொடர்வதையடுத்து மத சகிப்புதன்மைக்கு ஆதரவாக ட்ரம்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இவன்கா ட்ரம்ப் திங்களன்று பதிவிட்ட மத சகிப்புதன்மை பற்றிய ட்வீட்தான் அமெரிக்க மக்களிடையே தற்போதைய விவாத பொருளாக மாறியுள்ளது.
இவன்கா ட்ரம்பின் கணவரான ஜார்ட் குஷ்னர் யூத மதத்தைச் சேர்ந்தவர். திருமணத்தின்போது இவன்கா ட்ரம்ப் யூத மதத்துக்கு மாறிவர். இவன்கா ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் பெண் வர்த்தக சபை உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு தனது பங்களிப்பை அளித்திருக்கிறார்.
திங்கட்கிழமை உலக நாடுகளின் 11 வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட குண்டு வெடிப்புகள் யூத மதத்துக்கு எதிரான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள் பலவற்றில் யூத எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மதசகிப்புதன்மைக்கு ஆதரவாக இவன்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்க என்ற நாடு மத சகிப்புதன்மையால் உருவானது. நாம் நமது இல்லத்தை வழிபாடுகள் மற்றும் மத மையங்களால் பாதுகாக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
யூத மத பகைமையால், இவன்கா ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதால்தான் இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்று இவன்கா ட்ரம்புக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏன் கண்டனங்கள் தெரிவிக்கவில்லை என்று இ-மெயில்கள் குவிந்தன. இதற்கு ட்ரம்ப் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படாமல் இருந்தது.
ட்ரம்ப் தலைமையிலான அரசு யூத பகைமைக்கு எந்த எதிர்ப்பம் தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த வியாழக்ககிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ட்ரம்ப்பிடம் யூத பத்திரிக்கை ஒன்று, "அதிகரித்து வரும் யூத பகைமையை எதிர்கொள்ள அரசு என்ன திட்டமிட்டுள்ளது?" என்று கேள்வி எழுப்பியதற்கு ட்ரம்ப் கோபமாக, "உலகிலேயே குறைந்த யூத எதிர்ப்புக் கொண்ட நபர் நான்தான்" என்று பதில் கூறினார்.
இந்த நிலையில் இவன்கா ட்ரம்ப் மத சகிப்புதன்மைக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.