

சிரியாவின் ரக்கா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில், மக்கள், தீவிரவாதிகள் என 30 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறும்போது, “ரஷ்ய விமானப்படை விமானங்கள் சுமார் 10 முறை தாக்குதல் நடத்தின. இதில், 70 பேர் காயடைந்தனர்” எனத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் ஐஎஸ் தீவிரவாதிகள் என தெரிவிக்கப்படவில்லை. மொத் தம் 6 டபோலெவ் போர் விமானங் களைப் பயன்படுத்தி ரக்கா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தாக்குதல் நடத்தி, ரசாயன ஆயுத தொழிற்சாலையை அழித்ததாக ரஷ்யா உறுதி செய்துள்து.
சிரியாவின் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களையும் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.