

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு ஆய்வு பிரிவின் தலைவராக இந்தியாவின் அச்சம்குலங்கரே கோபிநாதன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை சார்பில் தனித்து இயங்கும் ஒரே அமைப்பான கூட்டு ஆய்வு பிரிவு தலைவர் பதவிக்கு அண்மையில் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 183 வாக்குகளில் 106 வாக்குகள் பெற்று இந்தியாவின் அச்சம்குலங்கரே கோபிநாதன் வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சீனாவின் தூதர் ஜங் யான் தோல்வியடைந்தார். இதற்கு முன் கடந்த 2013 ஜனவரி முதல் 2017 டிசம்பர் வரை கோபிநாதன் இப்பதவியில் நீடித்தார். தற்போது 2-வது முறையாக மீண்டும் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இப்பிரிவின் பிற உறுப்பினர்களாக காம்பியாவின் ஜாக்சன், ஹைத்தியின் ஜீயன் வெஸ்லே, ரஷ்யாவின் நிக்கோலே லாஸி்ன்கி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டு ஆய்வு பிரிவு உலகம் முழுவதும் கள ஆய்வு, விசாரணை, மதிப்பீடு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.