

பாகிஸ்தானில் செயல்படும் தாலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு தயாரிக்கும் விதம் குறித்த தகவல்கள் கொண்ட லேப் டாப் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. “உஸ்மான், மகமுது, பக்ருல் என்ற இந்த மூவரும் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
டாக்காவில் உள்ள சிற்பக்கலை அகாடமி வளாகம் எதிரில் ஞாயிற்றுக் கிழமை இரவு இவர்கள் கைது செய் யப்பட்டனர்” என்று டாக்கா மாநக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மொனிருல் இஸ்லாம் நிருபர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
“முதல்கட்ட விசாரணையில் அவர்கள் மியான்மரை பூர்வீகமாகக் கொண்ட பாகிஸ்தானியர் என்பது தெரியவந்துள்ளது.
சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிப்பதில் கைதேர்ந்த இவர்கள், மியான்மரின் ரக்கேன் மாநிலத்தில் நாசவேலையில் ஈடுபடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பில் பல முக்கிய ஆதராங்கள் உள்ளன. அவர்களின் பயணத்திட்டத்தின் முழு விவரமும் இன்னும் தெரிய வில்லை. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இருக் கிறோம்” என்றார் மொனிருல் இஸ்லாம்.