

சிரியாவின் அல்-மயாதின் பகுதியில் அமெரிக்க கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ.எஸ். தீவிரவாத முகாம்களை அழிக்க அமெரிக்க கூட்டுப்படை வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 26-ம் தேதி அமெரிக்க கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதல் களில் 42 பொதுமக்களும் 15 ஐ.எஸ். தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.