

தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டினர் அதிக ளவில் கூடும் பகுதிகளில் ஒரே நாளில் 11 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத் தப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகினர். ஏராளமானோர் படு காயங்களுடன் உயிர் தப்பியுள் ளனர்.
பாங்காக்கில் இருந்து தென் மேற்கே, 145 கிமீ தொலைவில் உள்ள ஹுவாஹின் நகரில் உள்ள கடலோர ரிசார்டில் மணிக் கூண்டு அருகே நேற்று காலை 2 குண்டுகள் வெடித்தன. இதில், ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.
அங்கிருந்து 200 மீட்டர் இடை வெளியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூடியிருந்த இடத்தில் நேற்று முன்தினம் இரவு, 2 குண் டுகள் வெடித்ததில், பெண் ஒருவர் பலியானார். வெளிநாட்டினர் 11 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். சுரத் தானி மற்றும் ட்ராங் பகுதிகளில் 3 இடங்களில் குண்டு வெடித்து, மேலும் 2 பேர் பலி யாகினர். புகெட் தீவில் உள்ள படாங் கடற்கரைப் பகுதிகளில் உள்ள பிரபல ரிசார்டுகளிலும் குண்டுகள் வெடித்துள்ளன. இதில் சிலர் காயமடைந்துள்ளனர். மியு வாங் மாவட்டத்தில் ஆளுநரின் குடியிருப்புக்கு அருகிலும் ஒரு குண்டு வெடித்துள்ளது.
நேற்று மதியம் வரை சுமார் 24 மணிநேரத்தில் தாய்லாந்தின் தெற்கே, 5 மாகாணங்களில் 11 இடங்களில் குண்டுகள் வெடித் துள்ளன. இதில் பெரும்பாலும் இரட்டை குண்டுவெடிப்புகளாகும்.
தாக்குதல்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப் பேற்கவில்லை. நாட்டில் கலவரம், குழப்பத்தை ஏற் படுத்தவேண்டும் என்ற நோக்கத்தி லேயே இத்தாக் குதல்கள் நடத்தப் பட்டுள்ளதாக, பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
இதற்கிடையே, ட்ராங் மாகாணத்தில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 7 மணிக்குள் கிராபி, நக்கோன் தம்மாரத் உள்ளிட்ட 4 இடங்களில் கட்டி டங்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் தீப்பிடித்து எரிந்துள் ளன. உயிர்ச் சேதம் ஏதுமில்லை என்றாலும், இவை குண்டுவெடிப்பு தாக்குதல்களுடன் தொடர்புடைய வையா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
தாய்லாந்தின் புகெட் தீவில், படோங் நகரில் குண்டுவெடித்த பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.