இதய நோய்களை தடுக்கும் சாக்லெட்: ஆய்வில் தகவல்

இதய நோய்களை தடுக்கும் சாக்லெட்: ஆய்வில் தகவல்
Updated on
1 min read

இனி யாராவது உங்களிடம், 'சாக்லெட் சாப்பிடக் கூடாது' என்று அறிவுரை கூறினால் அவர்களிடம் கூறுங்கள், 'நான் என் இதயத்துக்காக சாப்பிடுகிறேன்'என்று. ஆம் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் இதயப் பிரச்சினைகள் ஏற்படாது என லண்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் மருத்துவ ஆய்வில் கூறியதாவது, சாக்லெட் உட்கொண்டால் இதயம் சார்ந்த நோய்களிலிருந்து தப்பிக்கலாம், இந்த ஆய்வு 50 முதல் 64 வயதுள்ள சுமார் 55,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் தினசரி உணவுடன் சாக்லெட் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களது உடல் நலம் குறித்த ஆரோக்கியமும் தினமும் கண்காணிக்கப்பட்டது.

அதில் சாக்லெட்டை தங்கள் தினசரி உணவுடன் சேர்த்துக் கொண்டவர்களின் ரத்த ஓட்டம் சீரானதாகவும், மேலும் இதயத்திலுள்ள அதிகப்படியான கொழுப்புகளைக் குறைக்கும் பணியிலும் சாக்லெட் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டது"

இதன் மூலம் மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களுக்கு சாக்லெட் மருந்தாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகள் மேலும் நடத்தப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in