

பிரிட்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலையை அமைக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் உலகப் புகழ்பெற்ற தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இனவெறிக்கு எதிராகப் போராடிய தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் சிலையும் உள்ளது.
இதன் அருகில் காந்தி சிலையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வெஸ்ட்மின்ஸ்டர் நகர கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பிலிப் ஜேக்சன் என்பவரால் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட உள்ளது இந்த காந்தி சிலை. இதில் இந்திய பாரம்பரிய உடையான வேட்டியும், துண்டும் அணிந்தபடி காந்தியின் உருவம் பொறிக்கப்பட உள்ளது. - பிடிஐ