Published : 03 Mar 2017 09:36 AM
Last Updated : 03 Mar 2017 09:36 AM

இந்திய பொறியாளர் சுட்டுக்கொலை: அமெரிக்க சபாநாயகர் கவலை

அமெரிக்காவின் புதிய அதிப ராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி 20-ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு எச்-1பி விசா, குடியேற்ற கொள்கை களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மீது இன வெறி தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அமெரிக் காவின் கன்சாஸ் மாகாணம் ஒலேத்தேவில் இந்திய பொறி யாளர் நிவாஸை அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஆடம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

இந்த விவகாரங்கள் தொடர் பாக அமெரிக்க தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் 4 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

அவர் நேற்று முன்தினம் அமெரிக்காவின் தேசிய பாது காப்புச் செயலாளர் லெப்டினென்ட் ஜெனரல் மெக்மாஸ்டரைச் சந்தித் துப் பேசினார். இதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற சபா நாயகர் பால் ரயானைச் சந்தித்தார். அப்போது இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் சுட்டுக் கொல்லப் பட்டது குறித்து இருவரும் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பால் ரயான் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: இந்திய பொறியாளர் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா, அமெரிக்கா இடையிலான பொரு ளாதார, பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூலையில் ஜெர்மனியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அதிபர் ட்ரம்பும் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கின்றனர். அப்போது இரு தலைவர்களும் முதல்முறையாக சந்தித்துப் பேச உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x