கருப்புப் பண மீட்பு விவகாரம்: கரீபிய தீவு தேசங்களுடன் இந்தியா ஒப்பந்தம்

கருப்புப் பண மீட்பு விவகாரம்: கரீபிய தீவு தேசங்களுடன் இந்தியா ஒப்பந்தம்
Updated on
1 min read

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில், இரண்டு கரீபிய தீவு தேசங்களுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

கரீபிய தீவு தேங்களான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகியவற்றுடன் இந்தியா வரி தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்தியா சார்பாக ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கான நிரந்திர பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜியும், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் சார்பாக அவற்றின் தூதர் திலானோ பிராங்க் பர்ட்டும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மீட்பதற்கான வழிமுறை

இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளின் வரி தொடர்பான தகவல்கள் மற்றும் சட்டங்கள் ஆகியவையும், அந்தச் சட்டங்கள் ஒன்றை ஒன்று மீறாது கருப்புப் பணத்தை மீட்பதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கருப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான‌ இடமாக‌ சுவிட்சர் லாந்து நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் பல்வேறு அரசு புலனாய்வு அமைப்புகள் வேறு பல நாடுகளிலும் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்படிருக் கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறப்புக் குழுவினர் ‘பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் இல்லாததே கருப்புப் பணத்தை மீட்பதில் உள்ள சிக்கலுக்குக் காரணம்' என்று சமீபத்தில் தவகல் தெரிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தவல்கள் கூறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in