நிலோஃபர் புயல் அபாயம்: பாகிஸ்தானில் முன்னெச்சரிக்கை

நிலோஃபர் புயல் அபாயம்: பாகிஸ்தானில் முன்னெச்சரிக்கை
Updated on
1 min read

அரபிக்கடலில் உருவாகி உள்ள 'நிலோஃபர்' பாகிஸ்தானின் கராச்சி நகரை தாக்கக்கூடும் என்பதால் அங்கு உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரபிக்கடலில் உருவாகியுள்ள 'நிலோஃபர்' புயல் தென் கடலோர பகுதிகளில் வலுவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானை இந்த புயல் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. நிலோபர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வரும் 31-ம் தேதி குஜராத்தின் வடக்கு கடற்கரையோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது மும்பைக்கு மேற்கு - தென்மேற்கு திசையிலிருந்து கராச்சி நகரை நோக்கி 1,100 கி.மீ தூரத்தில் வலுபெற்றுள்ளது. 'நிலோஃபர்' புயல் கரையைக் கடக்கும்போது, கட்ச் உள்ளிட்ட குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், பாகிஸ்தானின் கராச்சி நகரையும் இந்த புயல் தாக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குஜராத் மாநிலத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புயல் எச்சரிக்கையால் பாகிஸ்தான் கடலோர மீனவ மக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துப்பட்டுள்ளது. புயல் பாதிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய உடனடி உதவிகளுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in