சிரிய ஒளிப்பதிவாளருக்கு ஆஸ்கார் விழாவுக்கு வர அனுமதி மறுப்பு

சிரிய ஒளிப்பதிவாளருக்கு ஆஸ்கார் விழாவுக்கு வர அனுமதி மறுப்பு
Updated on
1 min read

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிரியாவின் உள்நாட்டுப் போர் பற்றிய படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளருக்கு ஆஸ்கர் விருது விழாவுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடர்பாக வெள்ளை தலைக்கவசம் (வைட் ஹெல்மெட்) என்ற படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒளிப்பதிவாளரான 21 வயதான காலித் கதீப்புக்குதான் அமெரிக்கா வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஸோஸியேடட் பிரஸ் வெளியிட்ட செய்தியில், "முன்னதாக அமெரிக்கா வர, காலித் கதீப்புக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புப் படையினரின் உத்தரவுப்படி காலீத் லாஸ் ஏஞ்சல்ஸ் வருவதற்கு முன்னரே துருக்கி விமான நிலையத்தில் சனிகிழமையன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளது.

மேலும் காலித்துக்கு எதிரான தகவலை, அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வையிட் ஹெல்மேட் திரைப்படம் சிரியாவின் உள் நாட்டுப் போரில் மீட்புப் பணியில், ஈடுபட்ட மீட்புப் படையினரை பணிகளையும், அவர்கள் எவ்வாறு மக்களது உயிர்களை காக்கிறார்கள் என்பதை அவர்களுடனே பயணித்து விளக்குகிறது. இப்படத்தை ஆர்லாண்டோ வோன் ஏயின்ஸ்டன் இயக்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in