

சிரியாவின் வடக்குப் பகுதியில் கடந்த ஒருவாரமாக ரஷ்ய ஆதரவுப் படைகள் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் நடத்தும் சண்டையின் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் வெளியேறியுள்ளனர்.
இதுகுறித்து சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட செய்தியில், சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தின் அழிக்க ரஷ்ய ஆதரவுப் படைகள் கடந்த ஒருவாரமாக கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. இதனால் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்து சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிமக்கள் வெளியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் ஆவர்.
ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய நகரங்களை ரஷ்ய ஆதரவுப் படைகள் மீட்டுள்ளன. தொடர்ந்து ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் சண்டை நடந்து வருகிறது. வெளியேறிய மக்கள் பலர் மன்பிஜ், அலெப்போ ஆகிய நகரங்களில் முகாமிட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன சண்டையில் அரசுப் படைகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அங்கு ஐஎஸ் இயக்கத்தை அடியோடு அழிக்கும் முயற்சியில் சிரிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.