எகிப்து குண்டுவெடிப்புக்கு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

எகிப்து குண்டுவெடிப்புக்கு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
Updated on
1 min read

எகிப்தில் 6 பேரை பலி கொண்ட 4 குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அந்நாட்டின் சினாய் பகுதியிலிருந்து செயல் படும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த அமைப்புக்கு அல்-காய்தா வுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான அறிக்கை 2 இணையதளங்களில், அன் சார் பெய்ட் அல்-மக்திஸ் அல்லது சாம்பியன்ஸ் ஆப் ஜெருசலம் என்ற பெயரில் வெளியாகி உள்ளன. இதே குழுவினரும் அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய குழுவினரும் இதற்கு முன்பும் இதுபோன்ற அறிக்கைகளை இதே இணையதளங்களில் வெளி யிட்டுள்ளனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோ வில் உள்ள பாதுகாப்புத் துறை தலைமையகத்தின் மீது ரிமோட் கன்ட்ரோல் மூலம் கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும், அதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நகரின் மற்ற பகுதிகளில் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்கு தல் நடத்தியதாகவும் அதில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடக் கம்தான் என்றும், தொடர்ந்து இதுபோன்ற தாக்குதலை நடத்தப் போவதாகவும் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள் ளது.

காவல்துறை மற்றும் பாது காப்புத்துறை அலுவலகங் களை குறிவைத்து தாக்குதல் நடத்த இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

கெய்ரோவின் கிழக்கில் உள்ள காவல் துறை பயிற்சி மையம் அருகே சனிக்கிழமை குண்டு வெடித்தது. எனினும், இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in