Last Updated : 09 Jan, 2017 01:01 PM

 

Published : 09 Jan 2017 01:01 PM
Last Updated : 09 Jan 2017 01:01 PM

இரான் முன்னாள் அதிபர் அக்பர் ரஃப்சஞ்சானி காலமானார்

இரான் முன்னாள் அதிபர் அக்பர் ரஃப்சஞ்சானி மாரடைப்பால் காலமானார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1934 ஆம் ஆண்டு பிறந்த அக்பர் ரஃப்சஞ்சானிக்கு வயது 82.

மறைந்த அக்பர் ரஃப்சஞ்சானி 1989 முதல் 1997 வரை இரானின் அதிபராக இருந்தவர். இரானின் அரசியல் ஆளுமையாக விளங்கியவர்.

அக்பரின் மறைவு குறித்து அவரது உறவினர் கூறும்போது, "உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வடக்கு தெஹ்ரான்னில் உள்ள ஷோகதா மருத்துவமனையில் அக்பர் ரஃப்சஞ்சானி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அக்பர் ராஃப்சான்ஜனி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்பர் ரப்சஞ்சானியின் மறைவு இரானின் மிதவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

இரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு முக்கிய மையப் புள்ளியாக செயல்பட்டவர் அக்பர் ரஃப்சஞ்சானி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x