இந்தியாவுடன் பாலம் அமைக்கப்படாது: இலங்கை அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இந்தியாவுடன் பாலம் அமைக்கப்படாது: இலங்கை அதிபர் சிறிசேனா அறிவிப்பு
Updated on
1 min read

இந்தியா, இலங்கையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்படாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.24,000 கோடி மதிப்பில் கடல் பாலம், சுரங்கப் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந் தது. ஆனால் இலங்கை முன் னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பாலம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‘பாலம் அமைக்கப்பட்டால் இந்தியாவுக்கு இலங்கை அடிமையாகிவிடும்’ என்று சிங்கள எம்.பி. வாசுதேவ நாணயக்கார கூறினார். மற்றொரு சிங்கள எம்.பி. உதய கம்மன்பில அண்மையில் பேசியபோது, பாலம் கட்டப்பட்டால் அதனை குண்டுவைத்து தகர்ப்பேன் என்று மிரட்டல் விடுத்தார்.

‘இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக் குப் பகுதி, இந்தியாவின் தமிழகம் ஆகிய வையே பாலம் மூலம் இணைக்கப்படும். இந்தியர்கள் இடைவிடாது இலங்கைக்கு வருவார்கள். இதனால் சிங்களர்களுக்கு இருக்கும் ஒரே நாட்டையும் இழக்கும் நிலை ஏற்படும்’ என்று ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தனர்.

இத்தகைய எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்தியாவுடன் பாலம் அமைக் கப்படாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். கனேலந்தை விகாரையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: இந்தியா, இலங்கை இடையே பாலம் அமைக்கப்படுவதாக வெளி யான தகவலில் உண்மை யில்லை. இதுதொடர்பாக இருநாட்டு அரசுகளும் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

இதேபோல மதச்சார்பற்ற நாடாக அறி விக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியான தகவலிலும் உண்மை இல்லை என்றார்.

புதிய சட்டம்

இலங்கை உள்நாட்டுப் போரில் கடந்த 1994 முதல் 65,000 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டறிய புதிய அலுவலகம் அமைக்க வகை செய்யும் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு மஹிந்த ராஜபக்சவை ஆதரிக் கும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தச் சட்டத்தால் ராணுவத்துக்கு இழுக்கு ஏற்படும் என்று அவர்கள் வாக்குவாதம் செய்தனர். எனினும் கடும் அமளிக்கு நடுவே புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in