

அல்-காய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியின் 2 மகள்களை பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுவிப்பதற்காக, தங்கள் பிடியில் இருந்த அந்நாட்டு முன்னாள் ராணுவ தளபதியின் மகனை பரிமாற்றம் செய்துகொண்டதாக அல்காய்தா கூறியுள்ளது.
அல்-காய்தா பற்றி விரிவான தகவல்களை வெளியிடும் ‘அல் மஸ்ரா’ இதழில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
இச்செய்தியின் விவரம்: அல்-காய்தாவுக்கு எதிரான போரின் ஒரு நடவடிக்கையாக ஜவாஹிரி யின் 2 மகள்கள் மற்றும் ஒரு பெண் மற்றும் அவர்களின் குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் தனது பிடியில் வைத்திருந்தது. இவர் களை விடுவிப்பதற்காக, அல்-காய்தா பிடியில் இருந்த பாகிஸ் தான் முன்னாள் தளபதி அஷ்பக் பெர்வேஸ் கயானியின் மகனை பரிமாற்றம் செய்துகொள்ள பேச்சு வார்த்தை நடந்தது.
ஜவாஹிரியின் மகள்கள் உள் ளிட்டோரை விடுவிக்க முதலில் தயக்கம் காட்டிய பாகிஸ்தான் ராணுவம் பின்னர் ஒப்புக்கொண் டது. இவர்களை எகிப்து நாட்டில் சில வாரங்களுக்கு முன் விடுவித் தது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.