பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்ததாகக் கூறிய பெண்ணுக்கு மரண தண்டனை

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்ததாகக் கூறிய பெண்ணுக்கு மரண தண்டனை
Updated on
1 min read

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்ததாகக் கூறிய பெண் ஒருவருக்கு ஈரானில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ரெய்ஹனே ஜப்பாரி எந்த இந்தப் பெண்ணை இன்று அதிகாலை தூக்கிலிட்டதாக ஈரான் செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந்தப் பெண் கற்பழிக்க முயன்றவரைக் கொலை செய்திருப்பதாகக் கோரியிருப்பது பொய் என்றும் முன்னாள் உளவுத்துறை ஏஜெண்ட் மோர்டெசா அப்துலாலி சர்பாந்தி என்பவரை இந்தப் பெண் திட்டமிட்டுக் கொலை செய்திருப்பது சாட்சியங்கள் மூலம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கோர்ட் கூறியிருந்தது.

கொலை செய்வதற்கு 2 நாட்கள் முன்னதாகவே கத்தியை கொலையாளி வாங்கியிருப்பது இது ஒரு முன் கூட்டியே திட்டமிட்டக் கொலை என்பதை ஐயமின்றி நிரூபித்துள்ளதாக கோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

ஜப்பாரி என்ற அந்த 27 வயது பெண்ணை மன்னிக்க முடியாது என்று கொலைசெய்யப்பட்டவரின் உறவினர்கள் கூறிவிட்டதால் இன்று காலை தூக்கிலேற்றபப்ட்டார்.

ஆம்னெஸ்ட் இண்டெர்னேஷனல் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு தூக்கிலிடுவதை நிறுத்துமாறு நீதித்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் அதனால் ஒருவித பயனும் விளையவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in