

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் தொடர்ந்து கலவரம் நீடிப்பதால் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வசிப்பிடங்க ளிலிருந்து புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இவர்களில் பாதிப் பேர் ஐ.நா. முகாம்களில் தங்கி உள்ளனர்.
தலைநகர் ஜுபாவில் கடந்த 15ம் தேதி கலவரம் வெடித்தது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. கலவரம் வெடித்த நாள் முதல் அச்சம் காரணமாக பொதுமக்கள் புலம் பெயர்வது அதிகரித்து வருகிறது.
முகாம்களில் தங்கி இருப்பவர் களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக தன்னார் வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1,000 கோடி தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்காக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்கு சூடான் தலைவர்களை ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
இந்தப் பிரச்சினை விசயமாக, வளர்ச்சி தொடர்பான கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகளுக் கிடையிலான ஆணையத்தின் (ஐஜிஏடி) சார்பில் அதன் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசனை நடத்தினர். தெற்கு சூடான் அதிபர் சல்வ கிர் மற்றும் அவரது அரசியல் போட்டியாளருக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.