

வடகொரியா நடத்திய அணுஆயுத ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாகவும், அந்நாடு சீனாவை அவமதித்து விட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
வடகொரியா வெள்ளிக்கிழமை நடத்திய அணுஆயுத ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க ராணுவ தலைமைச் செயலகமான பென்டகன் தெரிவித்ததுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டர்ம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "வடகொரியா வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் இந்தச் செயல் மிக மோசமானது. வடகொரியா சீனாவின் வேண்டுகோளை அவமதித்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனை தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையே மோதல் அதிகாரித்து வருகிறது.
இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் நிலவியது. இதனைத் தணிக்கும் பொருட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்குமாறும், சண்டை வேண்டாம் என்றும் வடகொரியா மற்றும் அமெரிக்காவிடம் வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் சீன அதிபரின் முயற்சியை பொருட்படுத்தாமல் வடகொரியா மீண்டும் அணுஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது அமெரிக்காவை கோபமடைய செய்துள்ளது.