

அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 3 முதல் 9 வரை சோனியா காந்தி தங்கியிருந்தாரா என்பதை விசாரித்து பிப்ரவரி 6-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சீக்கிய அமைப்புக்கு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
1984-ல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த “நீதிக்கான சீக்கிய அமைப்பு” நியூயார்க் நீதிமன்றத் தில் கடந்த செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டார்.
அந்த நேரத்தில் நியூயார்க்கில் உள்ள ஸ்லோவான் கெட்டரிங் நினைவு மருத்துவமனையில் சோனியா சிகிச்சை பெற்றதாகக் கூறப்பட்டது. அப்போது சோனியா விடம் அளிக்கக் கோரி அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் சீக்கிய அமைப்பு சார்பில் சம்மன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி சோனியா காந்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
2013 செப்டம்பர் 3 முதல் 9 வரை நான் நியூயார்க் நகரிலோ, அமெரிக்காவின் வேறு எந்தப் பகுதியிலோ இல்லை. என்னிடம் யாரும் நீதிமன்ற சம்மனை வழங் கவும் இல்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சோனியாவின் மனுவுக்கு சீக்கிய அமைப்பிடம் நீதிபதி விளக்கம் கோரினார். குறிப்பிட்ட காலத்தில் சோனியா அமெரிக்காவில் தங்கியிருந்த தற்கான ஆதாரத்தைத் திரட்ட காலஅவகாசம் தேவை என்று சீக்கிய அமைப்பு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிப்ரவரி 16-க்குள் விசாரித்து பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.