

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், நம்புக்கா ஹெட்ஸ் நகரில் 2 ஓட்டல்களை நடத்தி வந்தார் கென்னத் ரோத் (74). கடந்த 2014-ம் ஆண்டு இந்த ஓட்டல்களில் குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக முகநூலில் அதே ஊரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் டேவிட் ஸ்காட் குறிப்பிட்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கென்னத், உடனடியாக முகநூலில் இருந்து அந்தச் செய்தியை நீக்கும்படி டேவிட்டிடம் வேண்டினார்.
ஆனால், டேவிட் அடித்து உதைத்ததில் படுகாயம் அடைந்த கென்னத், 6 மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற் றார். அதன் பிறகு மனைவியுடன் ஊரை விட்டு வெளியேறினார். இதுதொடர்பான வழக்கு நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜூடித் கிப்சன், கென்னத்துக்கு 1.5 லட்சம் டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டார்.