

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் (பிஐஏ) பைலட்களாக பணியாற்றும் சகோ தரிகள் இருவர், போயிங் 777 ரக விமானத்தில் சேர்ந்து பணியாற் றினர். இதன் மூலம் ஒரே விமானத் தில் பணியாற்றிய முதல் பைலட் சகோதரிகள் என்ற சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து பிஐஏ செய்தித் தொடர்பாளர் தன்யல் கிலானி கூறியதாவது:
எங்கள் நிறுவனத்தில் மர்யம் மசூத், எரூம் மசூத் என்கிற 2 சகோ தரிகள் பைலட்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இரு வரும் வெவ்வேறு விமானத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலை யில் சமீபத்தில் இருவரும் ஒரே விமானத்தில் பணியாற்ற நேரிட்டது. இதன்மூலம் ஒரே விமானத்தில் பணியாற்றிய பைலட் சகோதரிகள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். உடன்பிறந்த சகோதரிகள் இருவர் வர்த்தக விமானத்தில் சேர்ந்து பணியாற்றியதாக இதற்கு முன் உதாரணம் இல்லை.
உடன்பிறந்த இரு சகோதரிகள் விமானத்தில் ஒன்றாக பறந்த சம்ப வங்கள் இதற்கு முன் நிகழ்ந்துள் ளன. ஆனால் விமானி அறையை பகிர்ந்துகொண்டது இல்லை.
சமீபத்தில், இச்சகோதரிகளில் ஒருவரான எரூம் மசூதுக்கு போயிங்-777 ரக விமானங்களில் பணியாற்றும் வகையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதுவே இருவரும் ஒரே விமானத்தில் பணி யாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு தன்யல் கிலானி கூறினார்.