பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் சொத்து மதிப்பு ரூ.105 கோடி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் சொத்து மதிப்பு ரூ.105 கோடி
Updated on
1 min read

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சொத்து மதிப்பு ரூ.105 கோடியாக உள்ளது. அந்த நாட்டின் பணக்கார அரசியல் தலைவர்களில் நவாஸ் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார்.

பாகிஸ்தான் அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு விவரங்களை அந்த நாட்டு தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது. அதன்படி பிரதமர் நவாஸ் ஷெரீபின் சொத்து மதிப்பு முன்பைவிட சற்று சரிந்துள்ளது.

கடந்த 2012-ல் நவாஸின் சொத்து மதிப்பு ரூ.16 கோடியாக இருந்தது. ஆனால் 2013-ல் சுமார் 7 மடங்கு அதிகரித்து ரூ.112 கோடியை எட்டியது. 2014-ல் ரூ.123 கோடியாக உயர்ந்தது.

அதன்பிறகு 2015-ம் ஆண்டில் சற்று குறைந்து ரூ.120.5 கோடியாக இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு நிலவரப்படி நவாஸின் சொத்து மதிப்பு ரூ.105.73 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டைவிட சற்று குறைந்தாலும் பாகிஸ்தா னின் செல்வந்த அரசியல் தலைவர் களின் பட்டியலில் நவாஸ் இப்போ தும் முன்னிலையில் இருக்கிறார்.

பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானின் சொத்து மதிப்பு ரூ.86 கோடியாக உள்ளது. அவரிடம் ஒரே ஒரு கார் இருந்தது. அந்த காரையும் கடந்த ஆண்டு விற்றுவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in