

ஈரானின் கிழக்குப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தலைநகர் தெஹ்ரானில் இருந்து 1200 கி.மீட்டர் தொலைவில் உள்ள பஸ்டாக் பகுதியில் மையம் கொண்டி ருந்த இந்த நிலநிடுக்கம் ரிக்டர் அலகில் 5.5. ஆக பதிவானது. இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மின் விநியோகம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.
வான்வாட்டுவில் நிலநடுக்கம்
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான வான்வாட்டுவில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அலகில் 6.6 ஆக பதிவானது.