

ஏமனில் சவுதி தலைமையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 70 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், "ஏமனின் கடற்கரை நகரமான மோக்காவில் ஞாயிற்றுக்கிழமையன்று சவூதி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் தீவிரவாதிகள் 66 பேரும்,அரசு ஆதரவுப் படையைச் சேர்ந்த 14 பேரும் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரசாங்கம் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
சவுதி தலையீடு ஏமனில் ஏற்பட்டது முதல், இதுவரை 7,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.