

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் 240 இந்திய வார்த்தைகள் இடம்பிடித்துள்ளன.
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் 9-வது பதிப்பு நேற்றுமுன்தினம் வெளியிடப் பட்டது. இதில் 900 புதிய ஆங்கில வார்த்தைகள் சேர்க்கப் பட்டுள்ளன. அவற்றில் இந்திய ஆங்கிலத்தில் இருந்து 240 வார்த்தைகள் இடம்பிடித்துள்ளன. அவை பெரும்பாலும் இந்திய உணவுப் பொருட்களாகும்.
கறி லீப் (கறிவேப்பிலை), சென்னா தால் (சுண்டல்), கீமா (வெட்டப்பட்ட இறைச்சி துண்டு கள்), பப்பட் (அப்பளம்) உள்ளிட்ட இந்திய உணவுப் பொருட்கள் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆக்ஸ்போர்டு அகராதி தயாரிப்பு குழுவைச் சேர்ந்த பேட்ரிக் வொயிட் கூறிய போது, “ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகும். உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த சொற்கள் ஆங்கிலத்தில் கலந் துள்ளன. இந்திய உணவுப் பொருட்கள் உலகளாவிய புகழ் பெற்றவை. இதன் காரணமாக அவை தற்போது ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பிடித்துள்ளன” என்று தெரிவித்தார்.