Last Updated : 07 Jul, 2016 10:19 AM

 

Published : 07 Jul 2016 10:19 AM
Last Updated : 07 Jul 2016 10:19 AM

அமெரிக்க அதிபராவதற்கு தகுதியில்லாதவர் ட்ரம்ப்: தேர்தல் பிரச்சாரத்தில் ஹிலாரி தாக்கு

அமெரிக்க அதிபராவதற்கு குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்புக்கு தகுதி இல்லை என்று ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கரோலினா மாகாணம் சார்லொட்டி நகரில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஹிலாரியும் ஒபாமாவும் முதன்முறையாக ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது ஹிலாரி பேசிய தாவது: நம் நாட்டில் சுயநலத்தை விட பொதுநலனுக்கு முக்கியத் துவம் கொடுக்கிறோம். நாம் அனைவரும் ஒருமித்து செயல் படுகிறோம்.

இதன்படிதான் நமது அதிபர் ஒபாமா செயல்பட்டு வருகிறார். நாட்டு நலனை கருத்தில் கொண்டு சில கடினமான முடிவுகளை அவர் எடுத்து வருகிறார். ராஜதந்திரியான அவர் நம் நாட்டை மட்டுமின்றி உலகையே வழிநடத்துகிறார். இதுதான் அவருடைய நோக்கம்.

ஒபாமாவின் முயற்சியால், வரலாற்று சிறப்புமிக்க பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரானின் அணு ஆயுத உற்பத் திக்கு முட்டுக்கட்டை போட்டது, கியூபாவுடன் உறவை புதுப்பித் தது, ஒசாமா பின்லேடனை வேட் டையாடியது என பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப் பட்டுள்ளன.

இவருடைய செயல்பாடுகளை குடியரசு கட்சியின் அதிபர் வேட் பாளரான டொனால்டு ட்ரம்புடன் ஒப்பிட்டுப் பாருங்கள். சர்ச்சைக் குரிய வகையில் பேசி வரும் அவர் வெள்ளை மாளிகையில் அமர்வார் என்று கற்பனை செய்ய முடிகிறதா? அதிபராவதற்கான தகுதி ட்ரம்புக்கு இல்லை. மன ரீதியாகவும் அவர் தகுதி யற்றவர். இவ்வாறு ஹிலாரி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x