

வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அழகி சுட்டுக் கொல்லப்பட்டார். கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் அரசு எதிர்ப்புப் போராட்டக்காரர்களை போலீஸார் கலைத்தனர்.
வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சரணடைந்த எதிர்க்கட்சித் தலைவர் லியோ போல்டோ லோபஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
வாலென்சியா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் துரிஸ்மோ அழகி பட்டம் வென்ற ஜெனிஸில் கர்மோனோ(21) பங்கேற்றார். அப்போது மர்ம நபர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார்.
இதில், கர்மோனோ தலையில் குண்டு பாய்ந்தது. மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வியாழக்கிழமை உயிரிழந் தார். காரகாஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். ரப்பர் துப்பாக்கிக் குண்டுகளைப் பிரயோகித்து கூட்டத்தினரை விரட்டியடித்தனர். இதில், ஏராளமானவர்கள் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் கடந்த இருவாரங்களில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
டயர்களுக்குத் தீ வைத்தும், குப்பைகள், இடிபாடுகளைச் சாலையில் குவித்தும் ஆர்ப்பாட்டக் காரர்கள் போக்குவரத்தை தடை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள போராட்டக் காரர்களை விடு விக்கும்படி வெனிசுலா அரசை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். “உண்மையான பேச்சுவார்த்தையில் வெனிசுலா அரசு ஈடுபட வேண்டும்” என ஒபாமா தெரிவித்துள்ளார்.
நீதித்துறை மாளிகையை ஆர்ப்பாட்டாக்காரர்கள் முற்றுகை யிட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் லோபஸ் மீதான விசாரணை ராணுவச் சிறைக்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.