

இராக்கில் ஐ.ஸ். தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஒமர் அல் சிஷானி கொல்லப்பட்டு விட்டதாக, அந்த அமைப்புடன் தொடர்புடைய அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் சர்கத் பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் சிஷானி கொல்லப்பட்டதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்திருந்தது.
தற்போது அதனை அமாக் செய்தி நிறுவனம் உறுதி செய் துள்ளது. எனினும் சிஷானி எப் போது கொல்லப்பட்டார் என் பதை அமாக் தெரிவிக்கவில்லை. சிஷானியின் மரணம் ஐ.எஸ். அமைப்புக்கு பெரும் பின்னடைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஷானியுடன், ஐ.எஸ். துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் முஸ்தபா அல் காதுலியும் கொல்லப்பட்டுவிட்டார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சிஷானியின் தலைக்கு அமெரிக்கா சுமார் ரூ.33 கோடி சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்கத் நகரம் தற்போது இராக் அரசுப் படைகள் வசம் உள்ளது.
5200 பேர் கொலை
ரம்ஜானையொட்டி தாக்கு தல்களை தீவிரப்படுத்துமாறு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு உத்தரவிட்டிருந்தது. அதன்படி உலகம் முழுவதும் 5200 பேர் கொலை செய்யப்பட்டிருப் பதாக அந்த அமைப்பு தெரிவித் துள்ளது.
அமெரிக்காவின் ஆர்லாண் டோ தன்பாலின விடுதி தாக்குதல், வங்கதேச தலைநகர் டாக்கா தாக்குதல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்திய தீவிர வாதிகளுக்கு ஐ.எஸ். அமைப்பு புகழாரம் சூட்டியுள்ளது.