

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பகுதியில் மர்ம பையுடன் சுற்றித்திரிந்த சந்தேக நபரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "ஜனாதிபதி மாளிகையின் அருகே செவ்வாய்க்கிழமை கையில் சந்தேகத்துக்குகிடமான பொருளுடன் சுற்றிதிரிந்த மர்ம நபரை ரகசிய போலீஸ் படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்த மர்ம பொருள் கைப்பற்றப்பட்டு தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட நபர் ரகசிய போலீஸ் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் காரணமாக அதிகாரிகள் வெள்ளை மாளிகையிலிருந்து பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.