

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் கட்டுபாட்டிலிருந்த 2000-க்கும் மேற்பட்ட பிணையக் கைதிகளை சிரிய ஜனநாயக படை மீட்டது.
சிரியாவின் வட பகுதியிலுள்ள மன்பிஜ், ஐ.எஸ் அமைப்பின் ஆதிக்கம் நிறைந்த நகரமாகும். இப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சிரிய ஜனநாயக படையினர், ஐ.எஸ் அமைப்புடன் நடத்திய சண்டையில் ஐஎஸ் அமைப்பால் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட 2000-க்கு மேற்பட்ட பிணையக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடும் பெண்கள்
விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
ஐஎஸ் அமைப்புடன் நடத்தப்பட்ட சண்டையில் மன்பிஜ் நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் தங்கள் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளதாகவும், மிக விரைவில் மன்பிஜ் நகரத்தை ஐ.எஸ் அமைப்பிடமிருந்து மீட்டுவிடுவோம் என சிரிய ஜனநாயக படையினர் தெரிவித்துள்ளனர்.