

ஜனநாயகக் கட்சியின் ஆளுகையின் கீழ் வரும் அமெரிக்காவின் உட்பகுதிகள் சில போர் நடைபெறும் நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளதாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஒஹியோவில் நேற்றிரவு (திங்கட் கிழமை) பேசிய டொனால்டு டிரம்ப், "நீங்கள் கூர்ந்து கவனித்தால் அமெரிக்காவின் உட்பகுதிகள் சில போர் நடைபெறும் நாடுகளை விட மோசமான நிலையிலிருப்பது தெரியும். அப்பகுதிகளில் வறுமை, வேலையின்மை, தரமற்ற கல்வி, பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை மக்கள் எதிர் கொள்கின்றனர்.
ஜனநாயக கட்சியின் ஆட்சியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தெருவில் நடந்து சென்றால் சுடப்படுகிறார்கள். நான் உறுதியளிகிறேன் குடியரசு கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தெருவில் நடக்கும்போது பயம் கொள்ள தேவை இருக்காது.
அமெரிக்காவிலுள்ள ஆப்பிரிக்க அமெரிக்க மக்களுக்கு ஆதரவாக குடியரசு கட்சி நிச்சயம் செயல்படும். எனவே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஜனநாயக கட்சிக்கு அதரவளிப்பதிலிருந்து வெளியே வாருங்கள்" என்றார்.
இதற்கிடையில் அமெரிக்காவின் புகழ் பெற்ற வால் ஸ்ட்ரீட் இதழ் வெளியிட்ட கருத்து கணிப்பில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் 1% மட்டுமே டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.